இதில் உள்ள கருத்து என்னவென்றால், எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் நன்றாக வளரும் என்பதால், அவற்றின் ஸ்டாக் விலையும் அதிகரிக்கும், இதனால் குரோத் ஃபண்டின் மதிப்பும் அதிகரிக்கும் என்பதே ஆகும்.
இந்த ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் ரிட்டர்ன்கள் ஈக்விட்டி மார்க்கெட்டின் பெர்ஃபார்மன்ஸைப் பொறுத்து அமைபவை, மேலும் ஈக்விட்டி மார்க்கெட் குறைவான காலத்திலேயே எளிதாக ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ளவை , எனவே குரோத் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர் நடுத்தரம் முதல் நீண்ட கால நோக்கைக் கொண்டிருக்கவேண்டியது அவசியம். நீண்ட கால அளவில் பார்க்கும்போது பெரும்பாலான மற்ற வகைகளை விட ஈக்விட்டி அசெட் வகையே சிறப்பாக செயல்படுகிறது என்றாலும், அந்த முதலீடுகளின் மதிப்பு கணிசமான அளவிற்கு ஏற்ற இறக்கங்களை அவ்வப்போது அடைவதுண்டு, குறிப்பாக குறுகிய கால அளவுகளிலேயே இப்படி ஏற்ப்படும்.
மேலே குறிப்பிட்டது, குரோத் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் ஆகும். குரோத் ஃபண்டில் உள்ள ஈக்விட்டி ஷேர்களின் மதிப்பை, மார்க்கெட் செண்டிமெண்ட், பொருளாதார நிலைமைகள், நிறுவனத்தின் செயல்பாடு போன்ற பல்வேறு விஷயங்கள் பாதிக்கலாம். இதன் விளைவாக, குரோத் ஃபண்டுகளின் ரிட்டர்ன்கள் குறுகிய காலத்திலேயே மிகுந்த ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்கலாம், இதனால் சிலசமயம் குறுகிய காலங்களில் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கேப்பிடல் அப்ரிசியேஷன் மூலமாக செல்வத்தை உருவாக்குவதற்கு குரோத் ஃபண்டுகள் மிகவும் சிறந்த வழியாகும், குறிப்பாக உங்கள் முதலீட்டுக் காலம் நீண்ட காலமாக இருக்கும்போது இது சிறப்பாகச் செயல்படும். இவற்றின் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் ரிஸ்க் உள்ளது, ஆனாலும் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடிய முதலீட்டாளர்களுக்கு, நீண்ட கால அளவில் அதிக ரிட்டர்ன்களை வழங்கும் என்பதால் வழங்கும் இவற்றின் திறன் காரணமாக இவை கவர்ச்சிகரமான முதலீட்டுத் தெரிவாக உள்ளன.
குறுகிய கால நஷ்டங்களைக் கண்டு நீங்கள் அஞ்சுபவராக இருந்தால், குரோத் ஃபண்டுகள் உங்களுக்கான சிறந்த தெரிவாக இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் பொறுமையுள்ள முதலீட்டாளராக நீங்கள் இருந்தால், நீண்ட கால அளவில் உங்களுக்கு சிறந்த வெகுமதியை அளிக்கின்ற முதலீடாக குரோத் ஃபண்டுகள் இருக்கும்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.