எனது நிதி இலக்குகளுக்கு டெப்ட் ஃபண்டுகள் ஏற்றதாக இருக்குமா?

என் நிதியியல் இலக்குகளுக்கு, நிலையான வருவாய் கொண்ட ஃபண்ட்கள், பொருத்தமானவையாக இருக்குமா?

ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடும் போது, டெப்ட்ஃபண்ட்கள் (டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்) குறைவான, ஆனால் ஒப்பீட்டளவில் நிலையான ரிட்டர்ன்களைத் தந்திடும்.நிலையான வருமானம் தரும் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் என்பதால் அவை நிலைப்புத்தன்மையை வழங்கக்கூடியவை. ஈக்விட்டி ஃபண்ட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திடும் பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடும் போது இவை அதிக நிலைப்புத்தன்மையுடன் இருக்கும். குழந்தையின் கல்லூரிப் படிப்பு, மருத்துவத் தேவைகள், வீடு, ஓய்வுகாலம் போன்ற பல்வேறு நிதியியல் இலக்குகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிதியியல் திட்டமிடல், அனைவருக்குமே தேவைப்படுகிறது. நமது வாழ்வின் பல்வேறு நிலைகளில் எழக்கூடிய வெவ்வேறு நிதியியல் இலக்குகளை அடைவதற்காக, சொத்துக்கள், தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற பல்வேறு சொத்து வகைகளில் நாம் நமது பணத்தை முதலீடு செய்கிறோம்.

குறுகிய காலகட்டத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடிய மற்றும் ஓய்வுகாலத் திட்டமிடல் போன்ற நீண்டகால இலக்குகளுக்கு,ப் பொருத்தமான ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு எதிராக, குறுகிய கால இலக்குகளுக்கு டெப்ட்ஃபண்ட்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். உங்கள் போனஸ் தொகை அல்லது பிற முதலீடுகளை விற்றுக் கிடைத்த தொகையைக் கொண்டு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்யும் போது, ஒருசில மாதங்களுக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற சில டெப்ட்ஃபண்ட்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும். நீங்கள் நிறைவேற்றமுடியாமல் போகும் ரிஸ்க்கை எடுக்க விரும்பாத பட்சத்தில் உதாரணத்திற்கு, 2 ஆண்டு காலத்தில் ஏற்படக்கூடிய கல்லூரிப் படிப்புச் செலவு போன்றவற்றிக்கு, டெப்ட்ஃபண்ட்கள் பொருத்தமானவை. இதுபோன்ற இலக்குகளுக்கு நீங்கள் உங்கள் பணத்தை நிலையான வருவாய் அளிக்கும் ஃபண்ட்களில் முதலீடு செய்திடலாம். இவ்வாறு, டெப்ட்ஃபண்ட்கள் ஒவ்வொரு நிதியியல் திட்டமிடலிலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

350

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?