இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் NRIகள் முதலீடு செய்ய முடியுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

ஆம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபர்கள் (PIO) ஆகியோர்,இந்தியாவில் செய்த முதலீடு மற்றும் ஆதாயங்களை தாங்கள் வாழும் நாட்டிற்கே கொண்டு செல்லும் அடிப்படையிலும்(Repatriation basis) மற்றும் இந்தியாவிலேயே வைத்திருக்கும் அடிப்படையிலும் (எடுத்துச் செல்ல முடியாது)(Non-Repatriation basis)இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யமுடியும்.

இருந்தாலும், முதலீடு செய்வதற்கு முன்பு KYC போன்ற அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளையும் NRI நபர்கள் மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய வெளிப்படுத்தல்கள் இல்லாமல், US மற்றும் கனடா போன்ற நாடுகள், NRI மூலமாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. பின்வரும் நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், முதலீடு செய்வதற்கு முன் இந்திய நிதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிதி நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

NRIகள்,முதலீடு செய்யும் போது, இந்திய முதலீட்டாளர்களைப் போன்றே பெரும்பாலான நன்மைகளையும் வசதிகளையும் பெற்றிடுவர். அவர்கள் SIPகள் மூலம் முதலீடு செய்யமுடியும். மேலும் தங்களின் வசதிக்கேற்ப ஸ்விட்ச் செய்து கொள்ளவும், குரோத் அல்லது டிவிடென்ட் தேர்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் மற்றும் அவர்கள் விரும்பும்போது பணமாக்கிக் கொள்ளவும் முடியும்.

பரந்த அளவிலான இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதிலான முழுப் பலனையும் NRI மற்றும் PIOகள் பெற்றிடுவர்.

347

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?