பிற மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து எப்படி இன்டெக்ஸ் ஃபண்டுகள் வேறுபடுகின்றன?

Video

பல பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களும் இன்டெக்ஸ் ஃபண்ட்களும் பல்வகைப்படுத்தலை வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்கள் அவற்றின் குறிப்பிட்ட முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப ரிட்டர்னை ஈட்டுவதற்காக பங்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும்போது, இன்டெக்ஸ் ஃபண்ட்கள் ஒரு குறிப்பிட்ட இன்டெக்ஸைப் பின்தொடரும். எனவே இன்டெக்ஸில் சேர்க்கப்பட்டுள்ள அதே பங்குகளில் இன்டெக்ஸ் ஃபண்ட்கள் முதலீடு செய்கின்றன. இன்டெக்ஸ் ஃபண்ட்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவிற்கான பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் செயல்திறனுடன் முடிவெடுக்காது என்பதால், அவை செயலற்ற முறையில் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இன்டெக்ஸ் ஃபண்ட்கள் சராசரி சந்தை ரிட்டர்னை உருவாக்க முனைந்திடும், அதேநேரத்தில் செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவிற்கான பங்குத் தேர்வில் செயல்திறனுள்ள வாங்குதல்களை மேற்கொள்வதன் மூலம் ஆல்பாவை (அவற்றின் முக்கிய ரிட்டர்னை விட அதிகமான ரிட்டர்ன்) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். அதிக ரிஸ்க்கை எதிர்கொண்டுதான் அதிக ரிட்டர்னை எதிர்பார்க்க முடியும். ஆனால் இன்டெக்ஸ் ஃபண்ட்களோ வெறுமனே ஒரு இன்டெக்ஸைப் பின்தொடர்ந்து அந்த இன்டெக்ஸுடன் ஒத்திசைகின்ற ரிட்டர்னை உருவாக்கிடும்.

செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்கள் அதிக நிர்வாகக் கட்டணங்களைக் கொண்டிருக்கும். எனவே நிதி மேலாளர்களைப் பணியமர்த்துவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் அதிக செலவுவிகிதத்தைக் கொண்டிருக்கும். செயல்திறனுடன் கூடிய வர்த்தகம் காரணமாக இந்த ஃபண்ட்கள் கணிசமான பரிவர்த்தனைச் செலவையும் எதிர்கொள்ளும். அதேநேரத்தில் இன்டெக்ஸ் ஃபண்ட்கள் அவற்றின் போர்ட்ஃபோலியோவில் குறைவான பரிவர்த்தனைகளையே கொண்டிருக்கும். இது மியூச்சுவல் ஃபண்ட்களை விட இன்டெக்ஸ் ஃபண்ட்களை அதிக வரி சேமிப்பை அளிக்கக் கூடியதாக ஆக்குகிறது. இலாபத்தைப் பெறும் நோக்கில் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளை செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்கள் விற்கும்போது மூலதன இலாபங்களை உருவாக்குகின்றன. இந்த இலாபம், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்போது, அவர்களின் மூலதன இலாபங்கள் வரிப் பொறுப்பை அதிகரிக்கிறது.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?