PPF மற்றும் மியூச்சுவல் ஃபண்டுக்கு இடையே உள்ள வித்தியாசங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

PPF மற்றும் மியூச்சுவல் ஃபண்டுக்கு இடையே உள்ள வித்தியாசங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் zoom-icon

PPF (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு) மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் இவை இரண்டும் மிகப் பிரபலமான முதலீட்டு விருப்பங்கள் ஆகும். இந்த இரண்டு முதலீட்டு விருப்பங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன. 

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு (PPF) என்பது ஒரு நீண்டகால முதலீட்டு விருப்பமாகும், இது இந்திய அரசின் ஒரு திட்டமாகும். உத்திரவாதமான ரிட்டர்ன்களை முதலீட்டாளர்களுக்கு PPF வழங்குகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய அரசு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். இதில் தீர்மானிக்கப்பட்ட முதலீட்டுக் காலம் உள்ளது, ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.  அசல் தொகை, PPF-இல் இருந்து கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை. PPF-இன் லாக்-இன் காலம் 15 வருடங்கள், சில சமயங்களில் முதலீடு செய்ததில் இருந்து 7வது வருடத்திற்குப் பிறகு பிரீமெச்சூர் வித்டிராவல் அனுமதிக்கப்படும்.  PPF என்பது ரிஸ்க் குறைவான ஒரு முதலீட்டு விருப்பம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தைத் தொழில்முறையாக நிர்வகிக்கும் முதலீட்டு ஃபண்டுகள் ஆகும். ஸ்டாக்குகள், பாண்டுகள், பிற செக்யூரிட்டிகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஒரு மியூச்சுவல் ஃபண்டு முதலீடு செய்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளை AMCகள் (அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள்) அமைத்து நிர்வகிக்கின்றன, முதலீட்டின் ரிட்டர்ன்கள் முதலீடு செய்யப்பட்ட அசெட்களின் செயல்பாட்டைப் பொறுத்து இருக்கும். 

PPF மற்றும் மியூச்சுவல் ஃபண்டு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்:

  • உத்திரவாதமான ரிட்டர்னை PPF வழங்குகிறது, அதே வேளையில் மியூச்சுவல் ஃபண்டில் இருந்து வரும் ரிட்டர்ன்கள் சந்தை செயல்பாட்டைப் பொறுத்து அமையும். 
  • PPF-இல் லாக்-இன் காலம் உள்ளது, சில மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முதலீட்டாளர் முதலீடுகளை ரிடீம் செய்ய நினைத்தால் வெளியேறுவதற்கான கட்டணம் இருக்கும். மேலும் சில மியூச்சுவல் ஃபண்டு வகைகளில் லாக்-இன் காலம் உள்ளது.
  • PPF திட்டத்திற்குப் பிரிவு 80C-இன் கீழ் வரிச்சலுகை கிடைக்கும், PPF-இல் கிடைக்கும் வட்டிக்கும் வரிச்சலுகை உண்டு. ELSS மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு மட்டுமே பிரிவு 80C-இன் கீழ் வரிச்சலுகை கிடைக்கும். எனினும் மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கும் ரிட்டர்ன்களுக்குக் கேப்பிட்டல் கெயின் வரி கட்ட வேண்டும். 
  • உத்திரவாதமான ரிட்டர்னை PPF வழங்குகிறது, இதை இந்திய அரசு நிர்வகிக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கும் ரிட்டர்ன்களுக்கு உத்திரவாதம் இல்லை, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு இருக்கும். 

எனினும், முதலீட்டாளர்களின் நிதி இலக்குகள் மற்றும் நோக்கங்களைப் பொறுத்து மிகவும் பொருத்தமான முதலீட்டைத் தேர்வுசெய்ய வேண்டும்.

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

286

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?