CAS என்றால் என்ன? (முழுமையான கணக்கு அறிக்கை)

Video

ஒரு கல்வியாண்டில் வெவ்வேறு ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் வெவ்வேறு பாடங்களின் மதிப்பெண்ணை மாணவரின் பள்ளி அறிக்கை அட்டை காண்பிப்பது போல, ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கை (CAS) என்பது ஒரு முதலீட்டாளரால் ஒரு மாதத்தில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யப்பட்ட அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்து வருகின்ற ஒரு அச்சிடப்பட்ட அறிக்கை ஆகும். நீங்கள் மூன்று வெவ்வேறு நிதிகளில் முதலீடு செய்திருந்தால், பர்சேஸ், பணம் எடுத்தல், ஸ்விட்சுகள், SIP/STP/SWP, டிவிடென்ட் செலுத்துகைகள்/ டிவிடென்ட்களின் மறுமுதலீடு போன்ற அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். 

PAN உடன் இணைக்கப்பட்ட பல்வேறு போர்ட்ஃபோலியோக்களின் தொடக்க மற்றும் முடிவு பண இருப்புகளும் CASஇல் பதிவு செய்யப்பட்டிருக்கும். வங்கி விவரம், முகவரி, நியமனதாரர்கள் போன்றவற்றிலான மாற்றம் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகள் CASஇல் பதிவு செய்யப்படுவதில்லை. பல்வேறு ஃபண்ட் ஹவுஸ்களில் செய்யப்படும் மாதாந்திர நிதிப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், டீமேட்டில் உள்ள பிற செக்யூரிட்டிகளின் பரிவர்த்தனையையும் இது பதிவு செய்கிறது. இதன் பொருள், பங்கு தொடர்பான பரிவர்த்தனைகள் கூட CASஇல் பதிவு செய்யப்படுகின்றன.

எனவே, CAS என்பது உங்கள் நிதி முதலீடு தொடர்பான அனைத்துப் பரிவர்த்தனைகளின் ஒருங்கிணைந்த அறிக்கையாகும். CAS மாதந்தோறும் உருவாக்கப்பட்டு, அடுத்த மாதத்தின் 10ஆம் தேதிக்குள் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. PAN வைத்திருப்பவர்களுக்காக CAS உருவாக்கப்படுகிறது. எனவே இது குறிப்பிட்ட PAN உடன் தொடர்புடைய அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்கிறது. PAN வைத்திருப்பவரால் குறிப்பிட்ட மாதத்தில் நிதிப் பரிவர்த்தனைகள் எதுவும் செய்யப்படவில்லை என்றால், CAS உருவாக்கப்படாது. 

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?