SIP, லம்ப்சம் இவை இரண்டில் எதன் வழியாக ELSS-இல் முதலீடு செய்வது என்பது பற்றிய முடிவானது, நீங்கள் எப்போது, எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். நிதி ஆண்டின் இறுதியில் வரியைச் சேமிக்க விரும்பினால், லம்ப்சமில் முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கும். ஆனால், நீங்கள் நிதியாண்டின் தொடக்கத்திலேயே முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் எனில், லம்ப்சம், SIP ஆகிய இரண்டு வழிகளில் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ELSS முதலீடு வரி சேமிப்பு அனுகூலங்களை அளிக்கிறது, அதோடு ஈக்விட்டிகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறையும் கொண்டுள்ளது.
SIP வழியாக ELSS முதலீடு செய்வதில் இரண்டு நன்மைகள் உள்ளன. முதலில், வருடம் முழுவதும் உங்கள் முதலீடு விரவிச் செயல்படுத்தப்படுவதால் ரிஸ்க் குறைகிறது. இரண்டாவதாக, ருப்பீ-காஸ்ட் ஏவரேஜிங்காரணமாக, ஒரே முறை லம்ப்சமில் முதலீடு செய்வதுடன் ஒப்பிடுகையில், வருடம் முழுவதும் வெவ்வேறு NAVகளில் முதலீடு செய்வதால் உங்கள் யூனிட்களின் சராசரி விலை சிறப்பாக இருக்கும். மூன்றாவதாக, லம்ப்சம் முதலீட்டுடன் ஒப்பிடும்போது, தொடர்ச்சியாக சிறு தொகையைத் தவறாமல் முதலீடு செய்வது சுமையாக இருக்காது. ஆனால் நீங்கள் ஆண்டு முழுவதும் முதலீடு செய்கின்ற மொத்தத் தொகையானது ELSS முதலீட்டுக்கு நீங்கள் ஒதுக்க விரும்புகிற மொத்தத் தொகைக்கு சமமாக இருக்க வேண்டும்.
ELSS ஃபண்ட்களின் லாக்-இன் காலம் 3 வருடங்கள் என்பதால், லம்ப்சம் முதலீடாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் இன்று முதலீடுசெய்தால் அதோடு 3 வருடங்கள் கழித்தே நீங்கள் பணத்தை எடுக்க முடியும். ஒவ்வொரு SIP பேமெண்ட்டுக்கும் லாக்-இன் காலம் பொருந்தும். 12 மாதங்களும் முதலீடு செய்த மொத்தத் தொகையையும் வித்ட்ரா செய்ய விரும்பினால், கடைசி SIP தவணை 3 வருடங்களை நிறைவு செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
ELSS-இல் எதன் மூலம் முதலீடு செய்யலாம், லம்ப்-சம் அல்லது SIP?
343