ஹைப்ரிட் ஃபண்டு என்றால் என்ன?

Video

நாம் உணவு உண்பதற்கு வெளியே செல்லும்போது, அந்தச் சூழல், நேரம் மற்றும் நமது மனோநிலையைப் பொறுத்து, உணவு வகைகளை ஆர்டர் செய்ய விரும்புவோம். அலுவலக மதிய உணவின் போது அவசர வேலையாக இருந்தால் அல்லது பஸ்/இரயிலில் ஏறுவதற்கு முன்பு சாப்பிடும் போது, நாம் காம்போ உணவை தேர்ந்தெடுப்போம். அல்லது ஏதாவது ஒரு காம்போ உணவு பிரபலமாக இருப்பதை நாம் அறிந்தால், மெனு கார்டை கூட பார்க்க மாட்டோம். ஓய்வாக இருக்கும் போது, மெனுவில் இருந்து நமக்கு விருப்பமானவற்றை ஆர்டர் செய்வோம்.

அதேபோன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் உள்ள ஒரு முதலீட்டாளரும், பல்வேறு திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுத்து தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய வேண்டும், உதாரணத்திற்கு. ஈக்விட்டி ஃபண்ட் , டெப்ட் ஃபண்ட் , கோல்ட் ஃபண்ட் , லிக்விட் ஃபண்ட் , அதே சமயம், காம்போ உணவு போன்றும் சில திட்டங்கள் உள்ளன - அவற்றிற்கு ஹைபிரிட் திட்டங்கள் என்று பெயர். இந்த ஹைபிரிட் திட்டங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகைகளில் முதலீடு செய்யும். இதன்மூலம், முதலீட்டாளர்கள் இரண்டு திட்டங்களின் நன்மையையும் பெற முடியும். இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தொழில்துறையில் பல்வேறு வகையான ஹைபிரிட் ஃபண்ட்கள் உள்ளன. ஈக்விட்டி மற்றும் டெப்ட் அல்லது டெப்ட் மற்றும் தங்கம் ஆகிய இரண்டு சொத்துக்களில் முதலீடு செய்யும் சில திட்டங்கள் உள்ளன. ஈக்விட்டி, டெப்ட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டங்களும் உள்ளன. எனினும், பிரபலமான ஹைப்ரிட் திட்டங்கள், ஈக்விட்டி மற்றும் டெப்ட் அசெட்களில் முதலீடு செய்கின்றன.

வெவ்வேறு வகையான ஹைபிரிட் ஃபண்ட்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு உத்திகளைப் பின்பற்றிடும். முதலீடு செய்வதற்கு முன்பு, நீங்கள் தெளிவான நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

345