எது சிறந்த தேர்வு: குரோத் அல்லது டிவிடென்ட்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒருவர் உங்களிடம் வந்து, தான் ஒரு SUV வாங்க வேண்டுமா அல்லது ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக் காரை வாங்க வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? அனேகமாக நீங்கள் அவரிடம் கார் வாங்குவதன் முக்கியமான நோக்கம் என்ன என்று கேட்கக்கூடும். இல்லையா? குடும்பத்தினருடன் சேர்ந்து நீண்டதூரம் பயணம் செய்வதற்கு உகந்த ஒரு காரை வாங்க வேண்டுமா அல்லது நகரத்தினுள்ளே தினசரி ஓட்டும் வகையிலான ஒரு காரை வாங்கவேண்டுமா என்றும் கேட்பீர்கள். உங்கள் தேவைகளைப் பொறுத்து, காரைத் தேர்ந்தெடுப்பதைப் போன்று, எந்தக் காரணத்துக்காக முதலீட்டைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில், குரோத் அல்லது டிவிடென்ட் என்பதைத் தேர்ந்தெடுப்பது அமையும்.

நீங்கள் ஒரு நீண்டகால முதலீட்டாளராக இருந்தால், உங்களுக்கு நீண்டதூரப் பயணத்துக்கு உகந்த ஒரு SUV தேவை. ஃபண்டில் உங்களுக்கு விருப்பமான குரோத் தேர்வில் முதலீடு செய்திடுங்கள். ஃபண்டின் மூலம் பெறப்படும் வருவாயானது ஒன்றாகத் திரட்டப்பட்டு , நீண்டகாலம் கழித்து அதனை விற்கும்போது அதிக NAVஐப் பெற்றுத் தரும். ஆனால், உங்கள் வழக்கமான வருமானத்துடன் கூடுதலாக ஒரு துணை வருமானத்தைப் பெற விரும்பினால், டிவிடென்ட்டை பெறுவதற்கு தேர்வு செய்திடுங்கள். டிவிடென்ட்களின் மீது முதலீட்டாளர்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. இரண்டு தேர்வுகளில் ஒன்றைச் செய்யும் போது வரியின் தாக்கங்களைப் பார்த்து மற்றும் உங்கள் நிதித் தேவைகளுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்திடுங்கள்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்