SIP-ஐத் தொடங்குவது/நிறுத்துவது எப்படி? ஒரு தவணையைக் கட்ட நான் தவறினால் என்ன ஆகும்?

SIP -ஐ எவ்வாறு நான் தொடங்குவது/ நிறுத்துவது? ஏதேனும் ஒரு தவணையை நான் கட்டத் தவறிவிட்டால் என்ன நடக்கும்? zoom-icon

நீங்கள் எந்தவொரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, KYC செயல்முறையை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றாக குறிப்பிட்ட சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். SIP -ஐ தொடங்குவதும் நிறுத்துவதும் எளிதானது மற்றும் வசதியானது. SIP -ஐ எவ்வாறு தொடங்குவது என்பது இடதுபுறம் உள்ள படவிளக்கம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

ஒன்றிரண்டு தவணைகளை நீங்கள் தவற விட்டுவிட்டால் என்ன நடக்கும்?

SIP- முதலீடு செய்வதற்கு ஒரு வசதியான வழியாகும். இதில் ஒப்பந்தக் கடப்பாடுகள் எதுவும் கிடையாது. ஒருவேளை ஒன்றிரண்டு தவணைகளை நீங்கள் தவற விட்டாலும் கூட, எந்த அபராதமும் விதிக்கப்படாது. பெரும்பாலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது SIP -ஐ நிறுத்திவிடும்.அதற்காக, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மேலதிக தவணை பற்று வைக்கப்படாது. அதேசமயத்தில், முந்தைய SIP நிறுத்தப்பட்டாலும் கூட நீங்கள் அதே ஃபோலியோவில் இன்னொரு SIP -ஐயும் தொடங்கிக் கொள்ள முடியும். அடுத்தாகத் தொடங்கப்பட்ட SIP ஆனது, புதிய ஒன்றாகக் கருதப்படும். மீண்டும் SIP -ஐ அமைப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

உங்கள் நிதி நிபுணரின்  இன்றே கலந்தாலோசித்து, மியூச்சுவல் ஃபண்ட்ஸின் நன்மைகளை அனுபவித்து மகிழ்ந்திடுங்கள்!

347

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?