ETFகளின் பலன்கள் என்னென்ன?

ETFகளில் முதலீடு செய்வதில் உள்ள நன்மைகள் என்னென்ன?

எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் (ETF) வழக்கமான மியூச்சுவல் ஃபண்ட்களை விட அதிக நன்மைகளை வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால் பணத்தை இழந்துவிடுவோமோ என்று கவலைப்படுகின்ற தொடக்க நிலை ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு இவை ஒரு சிறந்த முதலீட்டு வகையாக இருக்கும். இதற்கான காரணம் என்ன?

• ETFகள் ஒரு பிரபலமான இன்டெக்ஸைப் பிரதிபலித்து, அந்த இன்டெக்ஸில் உள்ள அனைத்து செக்யூரிட்டிகளையும் உள்ளடக்குகின்றன என்பதுடன், மியூச்சுவல் ஃபண்ட்களை விட அதிக பல்வகைப்படுத்தலை வழங்குகின்றன

• இந்தப் பிரதிபலிக்கும் உபாயத்தால் (செயலற்ற நிதி மேலாண்மை), செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்களை விட குறைவான பரிவர்த்தனைகளே இருக்கும். ஏனென்றால் செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்கள் தங்களின் பெஞ்ச்மார்க்கை விட அதிக ரிட்டர்னைக் காட்டுவதற்காக தங்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளை அடிக்கடி வாங்கவோ, விற்கவோ செய்திடும். இந்தச் சிக்கலானது செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிக வரி விதிப்புக்கு வழிவகுக்கிறது. ஏனென்றால் ஃபண்ட்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவுக்குள் செக்யூரிட்டிகளை வாங்கும்போது அல்லது விற்கும்போது STT (பத்திரப் பரிவர்த்தனை வரி) மற்றும் மூலதன இலாபங்கள் வரி ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். இதனால் ETFகள் மற்ற மியூச்சுவல் ஃபண்ட்களை விட அதிக வரிச் சேமிப்பை அளிக்கக்கூடியவை.


• செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, ETFகள் குறைந்த செலவு விகிதத்தைக் கொண்டுள்ளன. செயல்திறனுள்ள ரிட்டர்ன்களை ஈட்டுவதற்கு, அதாவது பெஞ்ச்மார்க் குறியீட்டை விட அதிகமான ரிட்டர்னை ஈட்டுவதற்கு, மியூச்சுவல் ஃபண்ட்கள் மிகவும் திறமையான நிதி மேலாளர்களைப் பயன்படுத்த வேண்டும். 

• ETFகள் முதலீட்டாளர்களுக்கு அதிக வசதி மற்றும் லிக்விடிட்டியை வழங்குகின்றன. ஏனெனில், அவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளைப் போலவே வர்த்தகமும் செய்யப்படுகின்றன. சந்தை மூடப்பட்ட பின்னர், ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே NAV கணக்கிடப்படும். செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்களைப் போல் அல்லாமல், சந்தை நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் அப்போதைய விலைக்கு ETFகளை முதலீட்டாளர்கள் பரிவர்த்தனை செய்யலாம்.

பங்கு முதலீடு பற்றி உங்களுக்குத் தெரியாத பட்சத்தில், ETFகளே உங்கள் தொடக்க நிலையாகும்!

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?