அப்சொல்யூட் ரிட்டர்ன் என்றால் என்ன?

Video

”இந்த வீட்டை நான் 2004-இல் 30 இலட்சத்திற்கு வாங்கினேன். இப்போது அதன் மதிப்பு 1.2 கோடி! 15 வருடங்களில் அதன் மதிப்பு 4 மடங்கு அதிகமாகியுள்ளது” என்றெல்லாம் சிலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்! அப்சல்யூட் ரிட்டர்ன் என்பதற்கு இதையே ஓர் உதாரணமாகக் கூறலாம்.

ஒரு முதலீட்டின் இறுதி விலை மதிப்பை, ஆரம்ப முதலீட்டுத் தொகையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட கால அளவில் அது எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதன் அளவீடே அப்சல்யூட் ரிட்டர்ன் ஆகும். 

உதாரணமாக, நீங்கள் 5 வருடங்களுக்கு முன்பு ஒரு ஃபண்டில் ரூ.5000 முதலீடு செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்று உங்கள் முதலீடுகளின் மதிப்பு ரூ.6000 என்றால், நீங்கள் பெற்றுள்ள இலாபம் ரூ.1000. அதாவது உங்கள் ஆரம்ப முதலீடான ரூ.5000 என்பதன் 20%. 

அப்சல்யூட் ரிட்டர்ன் கணக்கிடும்போது கால அளவைக் கணக்கில் கொள்வதில்லை என்பதே இதிலுள்ள குறைபாடு. மேலே கூறிய உதாரணத்தில் 20% இலாபம் என்பது பெரிய இலாபம் போலத் தோன்றுகிறது. ஆனால், அதை அடைய 5 வருடங்கள் ஆகிறது என்று நினைக்கும்போது அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை? ஆனால், 5 வருடங்களுக்கு அதன் சராசரி ஆண்டு ரிட்டர்ன் (CAGR) எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தால், வெறும் 3.7% தான் வருகிறது. ஒரு வருடத்திற்கும் குறைந்த கால அளவில் முதலீடு செய்யப்படும் ஃபண்ட்களின் ரிட்டர்னைக் கணக்கிடுவதற்கே அப்சல்யூட் ரிட்டர்ன் பயன்படுகிறது. மற்ற அனைத்திலும் வருடத்திற்கான ரிட்டர்ன் எவ்வளவு (CAGR) என்ற மதிப்பே பயன்படுத்தப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட கால அளவில் ஒரு முதலீட்டால் கிடைக்கும் சராசரி ஆண்டு ரிட்டர்ன்.

மேலே காட்டிய உதாரணத்தில் CAGR மதிப்பைப் பயன்படுத்தினால், 5 வருடங்களில் 20% ரிட்டர்ன் என்பது பெரிய விஷயமல்ல என்று தெரியவருகிறது.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?