மல்டி கேப் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

மல்டி கேப் ஃபண்ட்களுக்கும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களுக்கும் என்ன வேறுபாடு? zoom-icon

மல்டி கேப் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்கள் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றால், அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையைப் பார்க்கலாம். மல்டி கேப் ஃபண்ட்கள் அவற்றின் அசெட்டுகளில் 65%-ஐ லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஸ்டாக்குகளில் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான இன்ஸ்ட்ருமென்ட்களில் முதலீடு செய்ய அந்தச் சுற்றறிக்கை அனுமதித்தது. மல்டி கேப் ஃபண்ட்கள் லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஸ்டாக்குகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 25% எக்ஸ்போஷர் கொண்டிருக்க வேண்டும் என செப்டம்பர் 2020-இல் SEBI அவசியமாக்கியது. மல்டி கேப் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அதிகளவு டைவர்சிஃபிகேஷனை வழங்குவதே இதற்கான நோக்கமாக இருந்தது. எனினும், மோசமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படும் ஒரு குறிப்பிட்ட துறையைக் கருத்தில்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் பல சமயங்களில் ஃபண்ட் மேனேஜர்கள் தங்கள் கணிப்புகளின் அடிப்படையில் வாய்ப்புகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு இது தடையாகிறது. அதனால் குறைந்தபட்சம் 25% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை ஏற்கக் கடினமாகிறது.

ஆகவே, நவம்பர் 2020-இல் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களை SEBI அறிமுகப்படுத்தியது. அவை மல்டி கேப் ஃபண்ட்கள் போன்றவையே, ஆனால் நெகிழ்த்தன்மை கொண்ட முதலீட்டு விருப்பங்களைக் கொண்டதாக இருந்தது. ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்கள் லார்ஜ் கேப்ஸ், மிட் கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் ஆகியவற்றுக்கு இடையில் ஒதுக்கீட்டை மாற்றுவதில் நெகிழ்த்தன்மையை வழங்குகின்றன, அதே சமயம் அதன் அசெட்டுகளில் 65%-ஐ ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான இன்ஸ்ட்ருமென்ட்களில் ஒதுக்கீடு செய்வதையும் உறுதிப்படுத்துகின்றன. இதுவே மல்டி கேப் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களுக்கு இடையிலான முக்கியமான வேறுபாடாகும். உதாரணமாக, பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, ஸ்மால் கேப்ஸில் முதலீடு செய்வதைக் குறைக்க வேண்டியுள்ளது என்று ஃபண்ட் மேனேஜர் உணர்ந்தால், அதற்கான ஒதுக்கீட்டை அவர் பூச்சியம் வரை குறைத்துவிட்டு லார்ஜ் கேப்ஸ்/மிட் கேப்ஸில் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும். ஆனால், மல்டி கேப் ஃபண்டில் இப்படி டைனமிக்காக போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க முடியாது.

மார்க்கெட் சைக்கிள்களைப் பொருட்படுத்தாமல், ஸ்மால் கேப், மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் நிர்வோனங்களில் நிலையான அளவு ஒதுக்கீடு செய்தது போக, மீதமுள்ளவற்றை மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்களில் முதலீடு செய்வதை சௌகரியமான வழியாகக் கருதும் முதலீட்டாளர்கள் மல்டி கேப் ஃபண்ட்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம். மார்க்கெட் கணிப்பின் அடிப்படையில் மார்க்கெட் கேப்களில் பல்வேறு பிரிவுகளில் முதலீட்டை அதிகரிக்கவும் குறைக்கவும் வசதியான நெகிழ்த்தன்மை கொண்ட முதலீட்டு உத்தியை விரும்பும் முதலீட்டாளர்கள் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம்.
 

345

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?