இன்டெக்ஸ் ஃபண்டுகளில் யார் முதலீடு செய்யலாம்?

யார் இன்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்? zoom-icon

இன்டெக்ஸ் ஃபண்ட்கள் என்பவை, குறிப்பிட்ட பங்குச் சந்தை இன்டெக்ஸ்களின் (BSE சென்செக்ஸ், நிஃப்டி 50, நிஃப்டி மிட்கேப் இன்டெக்ஸ் போன்றவை) செயல்திறனைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களாகும். இன்டெக்ஸின் காம்போசிஷனை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் செக்யூரிட்டிஸ் போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பதன் மூலம் குறிப்பிட்ட பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ்களின் முதலீட்டு ரிட்டர்ன்களைப் போலவே ரிட்டர்ன்களை வரவைப்பதை இவை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆனால் இன்டெக்ஸ் ஃபண்ட்களில் யார் முதலீடு செய்ய வேண்டும்? 

இந்த ஃபண்ட்கள் குறிப்பிட்ட மார்க்கெட் இன்டெக்ஸையே பிரதிபலிப்பதால், ஈக்விட்டி தொடர்பான ரிஸ்க்குகளால் இவை பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு. ஆகவே ஒப்பீட்டில் அதிகம் ரிஸ்க்கை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்ட்கள் சிறந்த முதலீட்டுத் தெரிவாக இருக்கும். இருப்பினும், மார்க்கெட் வீழ்ச்சியடையும்போது ரிஸ்க்கும் ஏற்ற இறக்கமும் ஏற்படும். 

மியூச்சுவல் ஃபண்டிற்குப் புதியவர்களுக்கும் இவை பொருத்தமான தெரிவாக இருக்கலாம். ஏனென்றால், இன்டெக்ஸ் ஃபண்ட்களில் செய்யும் முதலீடுகள், அதன் அடிப்படையாக அமைந்துள்ள இன்டெக்ஸின் செயல்திறனைக் காலப்போக்கில் பூர்த்திசெய்ய அல்லது கண்காணிக்க ஃபண்டின் போர்ட்ஃபோலியோ மேனேஜரையே சார்ந்திருக்கின்றன. 

இதுவரை,  இன்டெக்ஸ் ஃபண்ட்கள் நீண்ட முதலீட்டுக் காலத்தில் நல்ல ரிட்டர்ன்கள் முதல் நடுத்தரமான ரிட்டர்ன்கள் வரை கொடுப்பவையாகவும் இருந்திருக்கின்றன. இதனால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இவை பொருத்தமானவையாக உள்ளன.

பொதுவாக இன்டெக்ஸ் ஃபண்ட்கள் மிதமான/அதிக ரிஸ்க் கொண்டவை என்று கருதப்படுகின்றன, அதே சமயம் சாத்தியமுள்ள சில வரம்புகள் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். அவற்றில் சில:

●    இன்டெக்ஸ் அல்லாத ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது குறைவான நெகிழ்த்தன்மை கொண்டவை.
●    தேர்வுசெய்த இன்டெக்ஸை ஃபண்ட் மேனேஜர் துல்லியமாகக் கண்காணிக்காமல் போகக்கூடிய ரிஸ்க் உள்ளது.
●    இந்த ஃபண்ட்கள் பிரதிபலிக்க விரும்பும் இன்டெக்ஸுடன் ஒப்பிடும்போது, குறைவான செயல்திறன் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

இறுதியாக, இன்டெக்ஸ் ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பது முதன்மையாக, முதலீட்டாளரின் ரிஸ்க்கைத் தாங்கும் திறன், நிதி இலக்குகள் போன்ற முதலீட்டுக் காரணிகளைப் பொறுத்து இருக்கும். இந்த ஃபண்டில் முதலீடு செய்வதைப் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் தீர்மானிக்க மேலே உள்ள அம்சங்கள் உதவலாம். 

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?