ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி  நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்பது ஒரே முதலீட்டுத் திட்டத்தில் லார்ஜ்-கேப், மிட்-கேப், ஸ்மால்-கேப் ஆகிய ஃபண்ட்களை அணுகும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஈக்குவிட்டி மியூச்சுவல் ஃபண்டு ஸ்கீம்கள் ஓப்பன்-எண்ட் வகையைச் சார்ந்தவை. இது ஃபண்ட் நிர்வாகியைத் துறைகள் முழுவதிலும் உள்ள மாறுபட்ட மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கொண்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்கும்.

ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸிற்கு அவர்கள் முதலீடு செய்யக்கூடிய நிறுவனத்தின் அளவு அல்லது வகை தொடர்பாக எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இந்தப் பரந்த அணுகுமுறையின் காரணமாக அனைத்து முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும்.

ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான நன்மைகள் இவை:

  1. டைவர்ஸிஃபிகேஷன்: ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்ஸின் மூலம் வெவ்வேறு வகையான ரிஸ்க்கும் லாபமும் வழங்கக்கூடிய பல்வேறு பங்குகளில் உங்கள் பணம் முதலீடு செய்யப்படும்.
  2. ஃபிலெக்ஸிபிலிட்டி: வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மற்றும் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் உடைய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வசதியை இந்த ஃபண்ட்கள் வழங்குகின்றன. இந்த பரந்த வாய்ப்பின் மூலம் நிர்வாகிகளால் பல பங்குகளை வாங்க முடிவதுடன் அவற்றை பெஞ்ச்மார்க்கைவிட அதிக லாபத்திற்கு விற்கலாம்.
  3. டைனமிக் அசெட் அலகேஷன்: ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸில், ஃபண்ட் நிர்வாகியால் லார்ஜ் கேப், மிட்-கேப், ஸ்மால்-கேப் பங்குகளுக்கு இடையே மார்க்கெட் நிலவரங்கள் அடிப்படையில் முதலீட்டை மாற்ற முடியும். சூழலுக்கு ஏற்றவாறான இந்த அணுகுமுறை, மாறும் மார்க்கெட் டைனமிக்ஸிற்கு ஏற்றவாறு அமைந்து நல்ல லாபத்தை வழங்கும்.
  4. தொழில்முறை நிர்வாகம்: ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதால் தொழில்முறையிலான நிர்வாகிகளின் ஆலோசனைகளையும், உதவிக்குறிப்புகளையும் பெறுவீர்கள்.


பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?